விநாயக பெருமானின் ஒவொரு அம்சமும் ஒரு பெரிய தத்துவத்தை வெளிபடுத்துவதாக உள்ளது. பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பது ஏன் ? ஒரு முறை பிள்ளையார் தன் அப்பாவான சிவபெருமானை பார்த்து " உன் தலையை எனக்கு பலி கொடு " என கேட்டராம். இதன் பொருள் என்னவென்றால் நம்மிடம் எது உயர்ந்ததோ அதை தியாகம் பண்ணினால் தான் விநாயக பெருமானை நம்மால் மனம் குளிர செய்ய முடியும். அப்படிப்பட்ட தியாகத்தை செய்ய நாம் தயார் என்பதை குறிக்கும் வகையில் மூன்று கண்கள் உடைய அந்த சிவபெருமானை போலவே மூன்று கண்கள் இருக்கும் தேங்காயை உடைக்கின்றோம்.
அதேபோல் இந்த சிதறு தேங்காய் உடைப்பதில் இன்னொரு உண்மையும் இருக்கு. தேங்காயின் ஓடு நம் அகங்காரத்தை குறிக்கும். எப்படி ஓட்டை உடைத்தல் இளநீர் கிடைக்குமோ அதே போல் நம் அகங்கார ஓட்டை உடைத்தல் நமக்கு ஞானம் பிறக்கும்.
கணபதியை போல ஒரு பருமனான கடவுள் வேறு எவரும் இருக்க முடியாது. அவருடைய தலையோ யானை வடிவம் கொண்டது. பருமனான உருவம். மலை போல் இருக்கிறார். இருந்தாலும் அவர் ஒரு குழந்தை போன்றவர். குழந்தை என்றல் எது அழகு? நல்ல குண்டா கொழு கொழுன்னு இருந்ததான் அழகு. அதே போலத்தான் நம்ம வினையாக பெருமானும் தன்னுடைய கையில் மோதகத்தை வைத்துக்கொண்டு தன்னை ஒரு குழந்தை சாமியாகவே பாவித்து அருள் புரிகிறார்.இவரோ யானை மாதிரி இருக்கார் ஆனால் குழந்தை வடிவம் . அவருடைய வாகனம் எது? " மூஞ்சூர் ". என்னடா இப்படி பெரிய வடிவம் கொண்டு இருக்கும் விநாயக சாமி ஏன் இப்படி இரு சின்ன வாகனத்தை வைத்திருக்கவேண்டும் ? இதில் என்ன தத்துவமும் இருக்கு ? வாகனத்தாலா இறைவனுக்கு பெருமை.... இல்லவே இல்லை. இறைவனால் தான் வாகனம் பெருமை அடைகிறது. இதில் என்ன தத்துவ உள்ளடக்கம் இருக்கிறதென்றால் " இறைவன் எத்தனை கனமாக இருந்தாலும் பக்தர்கள் மனதில் கனக்காமல் லேசாக இருப்பேன்" என்று சொல்லாமல் சொல்கிறார்.
அதே போல் ஒவ்வொரு பிராணிக்கும் ஒவ்வொரு பெருமை உண்டு. ஆண் சிங்கத்திற்கு அடங பிடரியில் தான் பெருமை. மயிலுக்கு தோகையில் பெருமை. யானைக்கு அதன் தந்தத்தில் பெருமை. ஆனால் நீங்கள் பிள்ளையாரின் உருவத்தை நல்லா பார்த்தா அதிலும் ஒரு அர்த்தம் இருக்கறது புரியும். நமக்கு ஒரு விஷயம் பெருமை தருவதா இருந்தால் நாம் என்ன பன்னுவோம் ... அதை பத்ரமா பாத்துப்போம். ஆனா இந்த பிள்ளையார் என்ன பண்ணார் தெரியுமோ .... தன்னோட ஒரு தந்தத்தை ஒடிச்சு மகாபாரதம் எழுதினாராம். இது எதை காற்றதுன்னா நமக்கு அழகு, கெளரவம் தரக்கூடிய ஒன்றை காட்டிலும் தர்மத்தை சொல்லகின்ற ஒன்றுதான் பெரிதுன்னு நமக்கு சொல்லாம சொல்கின்றார் நம்ம விநாயக மூர்த்தி. தர்மத்தை நிலைநாட்ட நாம் எதை வேண்டும்னாலும் தியாகம் பண்ண தயாரா இருக்கனும்ன்னு சொல்லறார்.
இந்த விக்ன உருவமா இருக்கும் விநாயகர் எல்லைஇல்லா ஆனந்தத்தின் தத்துவமும் கூட. நாம எல்லாம் ஒரு பீச்சுக்கு போறோம்னு வெச்சுக்கலாம். அங்க நமக்கு எப்பவாவது அலுப்பு ஏற்பட்டுருக்கா ? இல்லை . அது போல குழந்தைகள் நிலாவை பார்த்துண்டே இருக்கும். அதுக்கு அல்லுப்பே ஏற்படாது. அப்படித்தானே யானையும் கூட. யானையை பார்த்து நமக்கு என்னிக்காவது அலுப்பு ஏற்பட்டிருக்கா ...இல்லவே இல்லை. அது போல தன்னை பார்க்க வரும் பக்தர்களுக்கு பார்க்க பார்க்க ஆனந்தம் பொங்கும் விக்ன மூர்த்தியாக விநாயக பெருமான் எல்லை இல்ல ஆனந்தத்தின் உருவமாக இருக்கிறார். அவர் பிறந்ததே ஆனந்தத்தில்தான். பண்டாசுரனை வதம் பண்ண பராஷக்தி படை எடுத்து போநப்ப பரமேஸ்வரன் பார்வதியை ஒரு ஆனந்த பார்வை பார்த்தாராம்.. அந்த தருணத்தில்தான் நம்ம விநாயக பெருமான் உருவானார். அவர் பிறந்து பண்டாசுரனின் விக்ன யந்திரத்தை உடைத்து பராஷக்திக்கு பண்டாசுரனை வதம் பண்ண உதவினதா கதை இருக்கு. அதாவது நமக்கு எப்படிப்பட்ட கஷ்டம் வந்தாலும் இந்த ஆனந்த மூர்த்தியா விளங்கும் விநாயகரை பிரார்த்தனை செஞ்சா எல்லா வினைகளும் விலகிடும்.
அதனால் தான் நாம எல்லாரும் எந்த கடவுளை பிரார்த்தனை செய்வதற்கு முன்னால் விநாயகரை பிரார்த்தனை செய்கின்றோம். இப்படிப்பட்ட இந்த விக்ன விநாயகரை நாம் எல்லாரும் பிரார்த்தனை செய்து நம் வாழ்வில் வெற்றி பெறுவோம்.
ஓம் ஹ்ரீம் நமசிவாய .............
No comments:
Post a Comment
Please leave your comment